SuperTopAds

திருமணத்திற்கு முன் தவறான உறவு!! -மக்கள் முன் காதலர்களுக்கு 100 கசையடி-

ஆசிரியர் - Editor II
திருமணத்திற்கு முன் தவறான உறவு!! -மக்கள் முன் காதலர்களுக்கு 100 கசையடி-

இந்தோனேசியா நாட்டில் திருமணத்திற்கு முன் தவறான தொடர்பு வைத்துக் கொண்ட காதலர்களுக்கு 100 கசையடிகள் வழங்கப்பட்டன.

இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் சரியத் சட்டம் பின்பற்றப்படுகிறது. அங்குள்ள லோக்சிமாவே என்ற இடத்தில் காதலித்து வந்த இளைஞனும், இளம் பெண்ணும் திருமணத்திற்கு முன் தவறான தொடர்பு வைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு இருந்தது.

இதையடுத்து இருவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் கசையடி தண்டனை வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி இருவருக்கும் தலா 100 கசையடிகள் வழங்கப்பட்டன. அப்போது வலி தாங்காமல் மயங்கி விழுந்த இளம்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.