SuperTopAds

ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யலாம்!! -பரபரப்பை ஏற்படுத்தும் புதிய சட்டம் தென்னாபிரிக்காவின் முன்மொழிவு-

ஆசிரியர் - Editor II
ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யலாம்!! -பரபரப்பை ஏற்படுத்தும் புதிய சட்டம் தென்னாபிரிக்காவின் முன்மொழிவு-

தென்னாபிரிக்கா நாட்டில் பெண்கள் விரும்பினால் பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பரபரப்பை ஏற்படுத்தும் புதிய சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. 

குறித்த சட்ட முன்மொழிவின்படி, ஒரே நேரத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் புரிவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இந்தத் சட்டத்திற்கு எதிராக அந்நாட்டில் உள்ள பழமைவாதக் குழுக்கள் தங்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளன. 

திருமணச் சட்டங்களில் மே மாதம் மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக அரசு தெரிவித்தபோது இதுகுறித்து சமூக ஊடகங்களிலும் அங்கு பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்தன. விமர்சனங்களும் கடுமையாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

அந்நாட்டில் தற்போது உள்ள திருமணச் சட்டம் பாலின பாகுபாடுடன் உள்ளது. எனவே அதில் சமத்துவத்தை கொண்டு வர சட்டத்தை சீரமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆர்வலர்கள் முன்மொழிந்தனர்.

இருப்பினும் பெண்கள் பல கணவர்களை கொண்டிருக்கலாம் என்ற இந்த முன்மொழிவை கன்செர்வேட்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் பழமைவாத குழுக்களை சேர்ந்தவர்கள், பல்வேறு மத தலைவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும் பெண் நல ஆர்வலர்கள், சமூக பணியாளர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசின் இந்த முடிவை பெண் ஆர்வலர்கள் பலர் ஒரு மைல் கல்லாகதான் பார்க்கின்றனர்.