SuperTopAds

மெலிந்த தோற்றத்தில் கிம் யொங்!! -கண்ணீர்விடும் வடகொரியர்கள்-

ஆசிரியர் - Editor II
மெலிந்த தோற்றத்தில் கிம் யொங்!! -கண்ணீர்விடும் வடகொரியர்கள்-

உடல் எடை குறைந்துள்ள வட கொரியா ஜனாதிபதி கிம் யொங் உன்னை கண்ட அந்நாட்டவர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், கண்ணீர் விட்டு கவலை தெரிவித்துள்ளனர். 

அவரின் உடல் நிலை குறித்து அண்மை காலமாக வேவ்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தது. குறிப்பாக அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், இறந்து விட்டார் என்றும் கூட செய்திகள் வெளியாகியிருந்தது. 

எனினும் கிம் யொங் உன் சில மாதங்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்சமயம் கிம் யொங் உன் வழக்கத்தை விடவும் மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் கிம் யொங் உன்னின் தற்போதைய தோற்றம் கண்டு மனமுடைந்த வடகொரிய மக்கள் அவரது உடல்நிலை குறித்து மிகுந்த கவலை கொண்டிருப்பதாக அந்த நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.