SuperTopAds

அபுதாபி பாலைவத்தில் தோட்டம்!! -வியப்படைய வைத்த இந்திய தம்பதியினர்-

ஆசிரியர் - Editor II
அபுதாபி பாலைவத்தில் தோட்டம்!! -வியப்படைய வைத்த இந்திய தம்பதியினர்-

துபாயில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் அத்வைதா சர்மா மற்றும் பிராசி ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் துபாயில் இருந்து அபுதாபிக்கு வேலை காரணமாக மாறிச் சென்றனர்.

வீட்டுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை தாங்களே வளர்க்க திட்டமிட்டனர். இதனால் வீட்டில் சிறு, சிறு செடி, கொடிகளை வைத்து அதன் மூலம் தக்காளி, சோளம் உள்ளிட்டவற்றை அறுவடை செய்துள்ளனர். 

தனது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இதன் காரணமாக ரசாயன கலப்பில்லாத ஊட்டச்சத்துள்ள காய்கறி, பழங்களை பெற வேண்டும் என தீர்மானித்தேன். இதனால் வீட்டிலேயே செடி, கொடிகளை வளர்க்க ஆரம்பித்தோம்.

இதற்கு தேவையான இயற்கை உரங்களுக்கு வீட்டிலிருந்து கிடைக்கும் உணவுக் கழிவுகளை பயன்படுத்தினோம். இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்று சம்மா தெரிவித்துள்ளார்.