சிரியா, ஈராக் எல்லையில் ஜோ பைடன் உத்தரவில் வான்வழித் தாக்குதல்!!
சிரியா, ஈராக் நாடுகளின் எல்லை பகுதிகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவுக்கு அமைய அந்நாட்டு விமானப்படை வான்வழித்தாக்குதல் நடத்தி உள்ளது.
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது, ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதலை நடத்தி வருவதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் இராணுவ மையமான பென்டகன் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத மையங்களாகவும், ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடங்களாகவும் செயல்பட்ட இடங்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பென்டகன் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.