யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் வழங்க 18 இடங்கள் தேர்வு! யாழ்.மாவட்ட செயலர் அறிவிப்பு,

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் வழங்க 18 இடங்கள் தேர்வு! யாழ்.மாவட்ட செயலர் அறிவிப்பு,

யாழ்.மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 18 இடங்களில் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் வழங்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவித்திருக்கின்றார். 

இதன்படி தடுப்பூசி வழங்க தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடங்கள் குறித்த விபரம் பின்வருமாறு,  

சங்கானை பொது சுகாதார பணிமனைக்கு உட்பட்ட ஜே-157 வட்டுக்கோட்டை இந்து கல்லூரி, 

சாவகச்சேரி ஜே-291, 294, கைதடி பொதுச்சுகாதார மத்திய நிலையம், 

ஜே-329,330,335,336 கொடிகாமம் பிரதேச வைத்தியசாலை.

யாழ்ப்பாணம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-76 யாழ் பரியோவான் கல்லூரி, 

ஜே-93, 95 பிரப்பங்குளம் மகாமரி அம்மன் கோவில் திருமண மண்டபம்.

காரைநகர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-47 பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்.

கரவெட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை குட்பட்ட ஜே-363 ஸ்ரீ நாரதா பாடசாலை.

ஊர்காவற்றுறை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே- 49, 50, 51, 52, 53 , 54 பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்.

கோப்பாய் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்டஜே-259 பிரதேச வைத்தியசாலை கோப்பாய்,

ஜே-286 பிரதேச வைத்தியசாலை அச்சுவேலி, முன்னணி ஊழியர்கள் பிரதேச வைத்தியசாலை கோப்பாய் மற்றும் அச்சுவேலி வைத்தியசாலை.

மருதங்கேணி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-431 ஆழியவளை கிராம உத்தியோகத்தர் அலுவலகம்.

நல்லூர் பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உற்பட்ட ஜே-94 நல்லூர் ஜெயபாரதி மையம்.

பருத்தித்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-402, 402 வடமராட்சி இந்த கல்லூரி.

சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-140 கட்டுடை சைவ வித்தியாலயம்,ஜே-133 மானிப்பாய் பிரதேச வைத்தியசாலை.

தெல்லிப்பழை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-249 ஊரணி கனிஷ்ட வித்தியாலயம்.

உடுவில் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே-185 உடுவில் மகளிர் கல்லூரி.

வேலணை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜேஃ 27 28 காளி கோவிலடி.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு