யாழ்.வடமராட்சி கிழக்கில் மீண்டும் மணல் அகழ்வுக்கு அனுமதி! அனுமதிக்கப்பட்ட அளவுதான் அகழப்படுகிறதா? மக்கள் கேள்வி..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் மீண்டும் மணல் அகழ்வுக்கு அனுமதி! அனுமதிக்கப்பட்ட அளவுதான் அகழப்படுகிறதா? மக்கள் கேள்வி..

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் மணல் அகழ்வு நடவடிக்கை மீளவும் தொடங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 

மருதங்கேணி பிரதேச செயலாளரின் சிபார்சு கனியவள திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு கணியவளத் திணைக்களமும் 

அதன் சிபார்சினை மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இதன் அடிப்படையில் முதல் கட்டமாக 200 கியூப்பிற்கே சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

200 கியூப்பை மட்டும்தான் இவர்கள் அகழ்வார்கள் என்பதனை உறுதி செய்ய முடியாத நிலமையே இருப்பதோடு 200 கியூப்பிற்கான அனுமதியை பெற்று 

2 ஆயிரம் கியூப் மணலை அகழ்வதே கடந்தகால வரலாறாகவுள்ளது. இந்த 200 கியூப்பில் சில முக்கிய தேவையான 

வடமராட்சி வைத்தியசாலை மற்றும் ஆலயப் பணிகள் உள்ளபோதிலும் யாழ்ப்பாணம் இராணுவத் தலமையக கட்டுமானத்திற்காகவும்

50 கியூப் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு நீண்ட காலத்தின் பின்பு முதல் தடவையாக அனுமதி வழங்கப்பட்டமைகள் ஊடாக இனியும் அனுமுதிகள் தொடரும்?

அல்லது 200 கியூப் அனுமதியை வைத்தே அதிக தொகை அகழப்படுமா என்றும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு