கொலம்பிய ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு!!
கொலம்பிய நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட நாட்டின் உயர் பதவிகளில் உள்ளவர்கள் பயணித்த உலங்குவானூர்த்தி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
அந்நாட்டின் ஜனாதிபதி இவான் டியூக், பாதுகாப்புத்துறை அமைச்சர் டீகோ மொலானோ, உள்துறை அமைச்சர் டானியல் ஆகியோருடன் குகுட்டா நகருக்கு உலங்குவானூர்த்தியில் சென்றுள்ளார்.
அப்போது போதை பொருள் தயாரிப்புக்கு பேர் பெற்ற அந்நாட்டின் கட்டடும்போ மாகாணம் வழியாகப் பறந்த போது ஹெலிகாப்டர் மீது சரமாரியாகத் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
உலங்குவானூர்த்தியில் இருந்தவர்கள் யாரும் காயம் அடையாத நிலையில், இ.எல்.என் போராளிகள் இதனை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.