கொரோனாவை தோற்கடித்த 75 வயது முதியவர்!! -43 முறை தாக்கியும் உயிர் மீண்டார்-
இங்கிலாந்து நாட்டில் வசித்துவரும் டேவ் ஸ்மித் என்னும் 72 வயது முதியவர் ஒருவர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் இவரது உடலில் அதிக நாட்கள் கொரோனா வைரஸ் தங்கியிருந்தது தான்.
இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்:-
கடந்த 10 மாதங்களில் 43 முறை எனது உடலில் கொரோனா பாசிட்டிவ் அறிகுறி தென்பட்டதாகவும் 7 முறை இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தான் இறக்கப் போகிறோம் என்ற நினைப்பில் தனக்கு சவப்பெட்டியை தயார் செய்தேன். இருப்பினும் அதிஸ்ரவசமாக உயிர் பிழைத்துவிட்டேன் என்றும் அவர் மேலும் கூறினார்.