அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது!! -கோர சம்பவத்தில் 100ற்க்கும் மேற்பட்டோர் பேர் பலி-
அமெரிக்கா நாட்டின் புளோரிடா மகாணத்தில் அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்ததில் 100ற்க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே உள்ள 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் 102 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கோர விபத்தில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் துரிதப்பட்டுள்ளன. 12 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
40 ஆண்டுகால குறித்த கட்டடத்தின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.