மாணவர்களின் உயிருக்கு ஆபத்தான சூழலில் பாடசாலைகளை உடனடியாக திறப்பதா? கல்வியமைச்சர் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
மாணவர்களின் உயிருக்கு ஆபத்தான சூழலில் பாடசாலைகளை உடனடியாக திறப்பதா? கல்வியமைச்சர் விளக்கம்..

நாட்டில் தற்போதுள்ள கொரோனா பரவல் அபாயம் மிக்க சூழலில் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்க முடியாது. 

மேற்கண்டவாறு கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (23) உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், 

தற்போதைய கொவிட் தொற்று அச்சுறுத்தல் இலங்கைக்கு மாத்திரம் விசேடமான ஒன்றல்ல. உலக நாடுகளில் பல இதற்கு தீர்வை காண்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு