நாட்டு மக்களுக்கு நாளை ஜனாதிபதி கூறப்போவது என்ன? எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அறிவிப்பு..

தற்கால நிலவரம் குறித்த சிறப்பு விளக்கவுரையினை நாளைய தினம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ளது.
நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் சுகாதார நெருக்கடியின் உண்மை நிலை, மற்றும் அதிலிருந்து நாட்டினை மீட்டெடுக்க எமது அரசாங்கம் முன்னெடுத்துவரும்
மற்றும் முன்னெடுக்கவிருக்கும் செயற்திட்டங்கள்,மற்றும் எமது பிராந்தியத்தில் நிலவும் பூகோள அரசியற் சிக்கல் நிலை மற்றும் உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவல் நிலை
ஆகியவற்றுக்கு மத்தியிலும் -நாட்டின் பொருளாதாரச் செழிப்பை இலக்காகக் கொண்டு எமது அரசாங்கம் முன்னெடுத்துவரும் மற்றும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள்
என்பன தொடர்பான எனது இந்த விளக்க உரையை -நாளை 25ஆம் திகதி, இரவு 8.30 மணிக்கு, நாட்டின் அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாகவும்
கேட்கலாம்..