யாழ்.கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 15ற்கும் மேற்பட்ட இந்தியர்கள்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 15ற்கும் மேற்பட்ட இந்தியர்கள்..!

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை நிலையத்தில் 15ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

தென்னிலங்கையிலிருந்து அழைத்துவரப்பட்டிருக்கும் குறித்த இந்தியவர்களுக்கு ஹிந்தி மட்டுமே பேச தொிந்த நிலையில் தொடர்பாடலை மேற்கொள்வதில் அங்கு பணியாற்றும் சிங்கள மொழி பேசும் மருத்துவர்கள் உட்பட சுகாதாரத் தரப்பினர் 

சிரமங்களை எதிர்கொண்டுவருவதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த முகாமில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ், சிங்கள மக்கள் அச்சம் கலந்த நிலையிலேயே காணப்படுவதாவும் தெரியவருகிறது.

இந்தியாவின் டெல்டா வகை கொரோனா வைரஸ் குறித்து இலங்கையில் தொடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுவரும் நிலையில் குறித்த நோய்த் தொற்று அவர்களுக்கு இருக்கக்கூடும் என்பதால் அந்த மக்கள் நிற்கும் இடங்களை 

இலங்கையைச் சேர்ந்தவர்கள் தவிர்த்துவருவதாகவும் தெரியவந்துள்ளது. வத்தளை பகுதியில் உள்ள இரும்புத் தொழிற்சாலையில் 128 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த தொழிற்சாலையில் 

அதிகமான இந்தியர்கள் பணியாற்றிவருவதாகவும் கூறப்படும் நிலையில் கோப்பாய் கொரோனா வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டவர்கள் குறித்த தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு