SuperTopAds

நாட்டு மக்களிடம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்திருக்கும் கோரிக்கை! மிக ஆபத்தான வைரஸ் பரவல் உள்ளதை மறக்காதீர்கள்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களிடம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்திருக்கும் கோரிக்கை! மிக ஆபத்தான வைரஸ் பரவல் உள்ளதை மறக்காதீர்கள்..

நாளை அதிகாலை பயணத்தடை தளர்த்தப்படவுள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. 

மிகவும் வேகமாக பரவக்கூடிய டெல்டா வைரஸ் காணப்படுவதால் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை இறுக்கமாக பின்பற்றவேண்டும் என பொதுசுகாதார பரிசோதகர் சங்க தலைவர் உபுல்ரோகண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர் முடக்கல் காரணமாக பொதுமக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக மூன்றுநாட்களிற்கு நாட்டை திறப்பது கரிசனைக்குரிய விடயமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கு பொதுமக்கள் உதவவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் பொதுமக்களின் பழக்க வழக்கங்களே நாட்டின் எதிர்காலத்தினையும் பொருளாதாரத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். 

எனவும் அவர் தெரிவித்துள்ளார்.