SuperTopAds

பிறந்து 18 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு! இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
பிறந்து 18 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு! இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி..

பிறந்து 18 நாட்களேயான குழந்தை ஒன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மினுவாங்கொட பகுதியில் பிறந்து 18 நாட்களான குழந்தை இருதய நோயினால் உயிரிழந்துள்ளது. இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில், 

குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

இதனையடுத்து குழுந்தையின் உடலம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.