இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட திரிபுபட்ட ஆபத்தான கொரோனா வைரஸ் குறித்து பீதியடைய தேவையில்லை..! பேராசிரியர் நீலிகா..
அல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வகை திரிபுபட்ட கொரோனா வைரஸ்களினால் உருவாகும் மரணங்கள் மற்றும் தொற்று அபாயத்தை அனைத்து வகையான கொவிட் தடுப்பூசிகளும் குறைக்குமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் திரிபு தற்போது உலகில் வேகமாக பரவி வரும் திரிபாகும். மாறுபட்ட வைரஸ் திரிபுகளினால் பாதிக்கப்படும் நபர்கள் ஆபத்தான நோய்களுக்கு ஆளாகும் நிலை காணப்படுகின்றது. இந்தியாவில், திரிபடைந்த வைரஸ் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளமையால்
இலங்கையில் அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் பலர் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும் அனைத்து வகையான கொவிட் தடுப்பூசிகளும் வைரஸின் தீவிரத்தையும் மரணத்தையும் வெற்றிகரமாக தடுப்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை அனைவரும் கட்டாயமாக
தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வதால் இவற்றிலிருந்து விடுபடமுடியும் என்றார்.