அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் இந்திய பெண்!! -பரிந்துரைத்த ஜோ பைடன்-
அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான சரளா வித்யா நாகலா என்பவரை நியமிக்க அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த பரிந்துரையை செனட் சபை ஏற்று அங்கீகரித்தால், கனெக்டிகட் மாகாணத்தில், கனெக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் தெற்காசியாவை சேர்ந்த ஒருவர் அமர்வது இதுவே முதல் முறை ஆகும்.