30 சினபோர்ம் தடுப்பூசிகளை திருடிய கும்பல்! இரு அரச உத்தியோகஸ்த்தர்களிடம் தீவிர விசாரணை, பொலிஸ் பேச்சாளர்..
90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 30 சினபோர்ம் தடுப்பூசிகளை திருடியமை தொடர்பில் இரு அரச ஊழியர்களிடம் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
குறித்த தகவலை பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 30 சினபோர்ம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார வைத்திய அதிகாரிய அலுவலகத்தில் பணியாற்றும்
ஊழியர் ஒருவர் மற்றும் அதே அலுவலக வாகன சாரதி ஒருவரிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.