அமெரிக்காவில் இலங்கைப் பெண் படுகொலை : சந்தேகநபர் கைது !
அமெரிக்காவில் இலங்கைப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
27 வயதான டென்டீமூர் என்ற இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மூர் போதைப்பொருள் பயன்படுத்தவதாகவும் வன்முறைகளுடன் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாகவும் 34 தடவைகள் போலிசாரினால் மூர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் போது தம்மைக் குறித்த பெண் ஏமாற்றியதாகவும் அதற்காக அவரை கொலை செய்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க குடியுரிமை பெற்ற கீதா ஹாவி நேற்று முன்தினம் நியுயோர்க்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கீதா தமது இலங்கை உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வுக்காக இலங்கை வரத் திட்டமிட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.