கறுப்பினத்தவர் கொலையை வீடியோவாக எடுத்த 18 வயது மாணவிக்கு அமெரிக்காவின் உயரிய விருது!!
அமெரிக்கா நாட்டு கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு கொலையை நேரடியாக வீடியோ பதிவு செய்த மாணவிக்கு உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் குறித்த கருப்பினத்தவர் டெரிக் சாவின் என்ற பொலிஸ் அதிகாரியால் வீதியில் கொல்லப்பட்டார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உலகம் முழுவதும் கறுப்பினத்தவருக்கு ஆதரவான போராட்டத்துக்கு வித்திட்டதுடன், உயிரிழந்தவருக்கும் நீதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வீடியோவை துணிச்சலாக எடுத்த டேர்னெல்லா ப்ரேசியர் என்ற 18 வயது மாணவிக்கு சிறப்பு பிரிவின் கீழ் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.