SuperTopAds

சிரியா வைத்தியசாலை மீது தாக்குதல்;!! -13 பேர் பரிதாப பலி-

ஆசிரியர் - Editor II
சிரியா வைத்தியசாலை மீது தாக்குதல்;!! -13 பேர் பரிதாப பலி-

அந்நாட்டில் நீண்ட காலமாக நடந்து வரும் போரால் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் இலட்சக்கணக்கில் பலியாகி வருகின்றனர். இவற்றில் கடந்த 10 ஆண்டுகளில், அந்நாட்டின் வைத்தியசாலைகள் மீது 400ற்க்கும் மேற்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. 

கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிகளில் மருத்துவ வசதிகளை பெறுவதற்காக இதுபோன்ற தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.  இந்நிலையில், ஆப்ரின் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் மீது குர்தீஸ் போராளிகள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் நோயாளிகள் உள்பட பொதுமக்களில் 13 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர, 27 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.