SuperTopAds

தெற்காசியாவில் மிகப்பெரும் சிறுநீரக வைத்தியசாலையை திறந்துவைத்தார் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ!

ஆசிரியர் - Editor I
தெற்காசியாவில் மிகப்பெரும் சிறுநீரக வைத்தியசாலையை திறந்துவைத்தார் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ!

சீனா அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் தெற்காசியாவில் மிகப்பெரும் சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனையினை ஜனாதபதி கோட்டபாய ராஜபக்ஸ திறந்துவைத்துள்ளார். 

இன்று காலை நடைபெற்ற திறப்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 2015 ஆம் ஆண்டு சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிந்த 

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சீன அரசாங்கத்தினால் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டது.இந்த வைத்தியசாலையில் 200 கட்டில்களும் இரத்த மாற்று சிகிச்சைகளுக்காக 

100 கட்டில்களும் சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சை கூடமும் 2 தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் உள்ளன.