யாழ்ப்பாண கடல் அடியில் வைக்கப்படவுள்ள பழைய பேருந்துகள்! கடல்வாழ் உயிரின பல்வகைமை விருத்தி செய்வதற்காக..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாண கடல் அடியில் வைக்கப்படவுள்ள பழைய பேருந்துகள்! கடல்வாழ் உயிரின பல்வகைமை விருத்தி செய்வதற்காக..

வடமாகாணகடலில் கடல் வாழ் உயிரின பல்வகைமை விருத்தி செய்யும் விசேட திட்டத்தின் கீழ்  கடற்றொழில் அமைச்சினால் விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் பிரகாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வடக்குக் கடலில் மேற்கொள்ளப்படவுள்ளது. 

பாவனைக்குதவாத பஸ் வண்டிகளை கடலினுள் விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு தேவையான சூழலை உருவாக்கும் செயற்திட்டமே

மேற்கொள்ளப்படவுள்ளது. வடமாகாண கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் குறித்த செயற்திட்டத்தில் சுமார் 40 கைவிடப்பட்ட பஸ் வண்டிகள் 

இவ்வாறு கடலினுள் விடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Radio