3 மாத குழந்தையை டி.வி. ரிமோட்டால் அடித்து கொன்ற கொடூர தாய்!! -கணவன் மீதுள்ள ஆத்திரத்தால் செய்த காரியம்-
துபாயில் கணவர் மீதுள்ள ஆத்திரத்தில் தான் பெற்ற 3 மாத குழந்தையை டி.வி. ரிமோட்டால் அடித்து கொலை செய்த கொடூர தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் எகிப்து நாட்டைச் சேர்ந்த 44 வயது நபர் 26 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலையிலும் வழமை போன்று இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் கணவர் வேலைக்கு சென்று விட்டார்.
எனினும் கணவர் மீது மனைவி ஆத்திரத்தில் இருந்தார். இந்நிலையில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த குழந்தை திடீரென அழ தொடங்கியது. இதனால் குழந்தையை அழாமல் இருக்க செய்தார்.
எனினும் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால், கூடுதல் எரிச்சல் அடைந்த அந்த தாய் ஆத்திரத்தால் கையில் கிடைத்த டி.வி. ரிமோட்டை எடுத்து குழந்தையின் மீது ஓங்கி அடித்தார். இதில் சுருண்டு விழுந்த குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த கணவர், குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மனைவியும் வீட்டில் இல்லாததால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குழந்தையில் உடலை மீட்டதுடன், தலைமறைவான கொடூர தாயையும் கைது செய்துள்ளனர்.