SuperTopAds

நேருக்கு நேர் மோதிக் கொண்ட ரயில்கள்!! -30 பேர் பலி: 50 பேர் காயம்-

ஆசிரியர் - Editor II
நேருக்கு நேர் மோதிக் கொண்ட ரயில்கள்!! -30 பேர் பலி: 50 பேர் காயம்-

பாகிஸ்தான் தெற்கு சிந்து மாகாணாம் கோட்கி மாவட்டத்தில் இரு ரயில்கள் இன்று காலை ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்துச் சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50ற்க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இன்று திங்கட்கிழமை காலை கோட்கி மாவட்டத்தில் ரைட்டி மற்றும் ஒபரோ ரயில் நிலையங்களில் இருந்து புறப்பட்ட ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வேகமாக சென்றப்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரே தண்டவாளத்தில் செல்வதை உணர்ந்து ஓட்டுநர்கள் ரயிலை நிறுத்த முயன்றபோதும் வேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த இந்த ரயில்கள் மோதியதாகக் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.