எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவர்!! -வேறு வழியின்றி குண்டை வெடிக்க வைத்து தற்கொலை-
போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவழi எதிரிகள் சுற்றி வளைத்துக் கொண்டதால் வேறு வழியின்றி குண்டை வெடிக்க வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் போகோ ஹராம், ஐ.எஸ் அல்கொய்தா போன்ற பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்ரிக்காவின் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பின் தலைவனாக அபுபக்கர் சேக்கு செயல்பட்டு வந்தான்.
இதற்கிடையில், போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பிற்கும் மற்றொரு பயங்கரவாத அமைப்பான மேற்கு ஆப்ரிக்க மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் குழுவிற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் கடந்த மே 18 ஆம் திகதி குறித்த இரு குழுக்குளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது, போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபுபகர் சேக்கை மேற்கு ஆப்ரிக்க மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் பயங்கரவாதிகள் சுற்றி வளைத்தனர்.
எதிரிகள் சுற்றி வளைத்ததால் தன்னிடம் இருந்த குண்டை வெடிக்க வைத்து போகோ ஹராம் தலைவன் அபுபக்கர் சேக் தற்கொலை செய்துகொண்டான். இந்த தகவலை மேற்கு ஆப்ரிக்க மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு முசப் அல்-பர்னாவி தெரிவித்துள்ளான். போகோ ஹராம் தலைவன் அபுபக்கர் உயிரிழந்ததை நைஜீரிய அரசாங்கமும் உறுதிபடுத்தியுள்ளது.