பயணத்தடை 14ம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா? பொலிஸ் பேச்சாளர் விளக்கம், மக்கள் சட்டத்தை மீறுவதாகவும் சாடல்..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை 14ம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா? பொலிஸ் பேச்சாளர் விளக்கம், மக்கள் சட்டத்தை மீறுவதாகவும் சாடல்..

நாட்டில் அமுலில்  உள்ள பயணத்தடை 14ம் திகதிக்கு பின் நீக்கப்படுவதும், நீடிக்கப்படுவதும் மக்களின் கைகளிலேயே உள்ளதென பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் 

மக்கள் நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமது ஒத்துழைப்பைச் சுகாதாரத்துறைக்கு வழங்க வேண்டும். பயணத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ள காலகட்டத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தால் மட்டுமே 

ஜூன் 14 அன்று நாட்டை மீண்டும் திறக்க முடியும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டும். நேற்று மட்டும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக 975 பேர் கைதுசெய்யப்பட்டனர். 

எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்தோடு, மேல் மாகாணத்துக்குள் வரும் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் 59 ஆயிரத்து 280 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்துள்ளமை பதிவாகியுள்ளன என்றும் 

அவர் மேலும் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு