SuperTopAds

மேலும் 28 சீன நிறுவனங்களுக்கு தடை!! -ஜே பைடன் அதிரடி நடவடிக்கை-

ஆசிரியர் - Editor II
மேலும் 28 சீன நிறுவனங்களுக்கு தடை!! -ஜே பைடன் அதிரடி நடவடிக்கை-

அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், மேலும் 28 சீன நிறுவனங்கள் மீது தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி தடை செய்யப்பட்ட சீன நிறுவனங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகை தகவல் தெரிவிக்கையில்:- அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பு அல்லது ஜனநாயக மதிப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அடக்குமுறை அல்லது கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பயன்படுத்தப்படும் சீன கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.