ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுங்கள்..! ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை..
இலங்கைக்கு சொந்தமான கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ் பிறஸ் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்து செல்லுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ சுற்றுசூழல் அதிகார சபைக்கு பணித்திருக்கின்றார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து
மே 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கப்பல் வந்தது முதல் நடந்த அனைத்து விவரங்களையும் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விபரித்தார். தீ விபத்துக்குள்ளான கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றது
எனக் கடல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அப்படி நிகழ்ந்தால், கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைக்க கப்பலை ஆழ்கடலுக்குக் கொண்டு செல்வது
மிகவும் பொருத்தமான நடவடிக்கை என்பது அவர்களின் முன்மொழிவாக இருந்தது.அதன்படி, தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில்,
சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலை ஆழ்கடலுக்குக் கொண்டு செல்ல உடனடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இந்த விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானம், தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அரசியல் விடயங்களை அதனுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாலக கொடஹேவா, சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரட்னம், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர,
பாதுகாப்பு செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், துறைமுகங்கள், சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை, நாரா உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர்
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.