பயணத் தடையை மதிக்காத மக்கள்..! வீதிகளில் குவிவதால் அதிரடி நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
பயணத் தடையை மதிக்காத மக்கள்..! வீதிகளில் குவிவதால் அதிரடி நடவடிக்கை..

நாட்டில் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பயணத் தடையை மீறும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அவர், குறித்த கடிதத்தை தமது தொலைபேசியின் மூலமாவது காண்பிப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியத் தேவைகளில் ஈடுபடுவோருக்கு பணிக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டமையை சிலர் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அத்தியாவசிய சேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியில் வருபவர்கள் கட்டாயம் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தை காண்பிப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் அத்தியாவசிய சேவையாக உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு