நடுக்கடலில் திடீரென தீப்பிடித்தெரிந்த கப்பல்!! -274 பயணிகள் பத்திரமாக மீட்பு: ஒருவரை காணவில்லை-
இந்தோனேசியா நாட்டின் வடக்கு மாலுகு மாகாணத்தில் உள்ள டெர்னேட் பகுதியில் இருந்து சுலாப்ஸ் தீவில் உள்ள சனானா நோக்கி நேற்று சனிக்கிழமை பயணிகளை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் பயணித்துக் கொண்டிருக்கும் போது திடீரென கப்பலின் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முதலில் கப்பலில் இருந்த பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பயணிகளை லைப் ஜாக்கெட்டுகள் அணிய வைத்து, கப்பலில் இருந்து சிறிய படகுகளில் குதிக்க வைத்தனர்.
இவ்வாறு 274 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஒருவரை மட்டும் காணவில்லை என்றும் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.