SuperTopAds

பாடசாலை வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!! -கனடாவில் வெளிவந்தது பூர்வ குடிமக்கள் மீதான இனப்பெடுகொலை-

ஆசிரியர் - Editor II
பாடசாலை வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!! -கனடாவில் வெளிவந்தது பூர்வ குடிமக்கள் மீதான இனப்பெடுகொலை-

ஐரோப்பியர்கள் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் குடியேறினார்கள். அப்போதே அந்த நாடுகளில் பூர்வ குடிமக்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். 

பூர்வ குடிமக்கள் நாளை பிரச்சினை ஏதும் செய்துவிடக் கூடாது என்பதற்காக இலட்சக்கணக்கான பூர்வ குடிமக்களை ஐரோப்பியர்கள் இனப்படுகொலை செய்தனர். 

இதனால் அமெரிக்க கண்டங்களில் பல இனங்கள் வேரோடு அழிந்தன. இதேபோலத்தான் கனடா நாட்டிலும் பூர்வ குடிமக்கள் ஏராளமானோரை கொன்று குவித்தார்கள். அங்கு நாகரிக ஆட்சி வந்த பின் பூர்வ குடிமக்களை ஒழிப்பது நிற்கவில்லை.

ஐரோப்பியர்கள் பூர்வ குடிமக்களுக்காக விடுதியுடன் கூடிய பாடசாலைகள் நடத்தினார்கள். அவ்வாறு நடத்தப்பட்ட பாடசாலைகளில் பல குழந்தைகள் மாயமான சம்பவம் நடைபெற்றது.

இந்த நிலையில் கம்லூப்ஸ் என்ற இடத்தில் பூர்வ குடிமக்கள் பாடசாலைய  வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பாடசாலை 1890 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டுவரை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அரசு அந்த பாடசாலையை பொறுப்பில் எடுத்தது. 1978 இல் பாடசாலை மூடப்பட்டுவிட்டது.

ஆரம்பத்தில் பாடசாலையை நடத்தியபோது பழங்குடி மக்களின் குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது வேறு வகையிலோ உயிரிழந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அவர்களது உடல்களை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் புதைத்துள்ளனர்.

ரேடார் உதவியுடன் அந்த எலும்புக்கூடுகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள். மேலும் அங்கு பலரது உடல்கள் இருக்கலாம் என தேடப்பட்டு வருகிறது. 

இந்த குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் தற்போது உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் இல்லை. இது பற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட இருக்கிறது.