SuperTopAds

கொள்ளையிட்ட வீடுகளில் 35 பெண்களை வன்புணர்ந்த நபர்!! -1088 ஆண்டுகள் சிறை: 5 ஆயள் தண்டனையும் விதிப்பு-

ஆசிரியர் - Editor II
கொள்ளையிட்ட வீடுகளில் 35 பெண்களை வன்புணர்ந்த நபர்!! -1088 ஆண்டுகள் சிறை: 5 ஆயள் தண்டனையும் விதிப்பு-

கொள்ளையிட்ட வீடுகளில் 35 பெண்களை குடும்பத்தார் முன்னிலையில் பாலியல் வன்புணர்வு செய்த 33 வயதுடைய நபருக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமல்லாது 5 ஆயுள் தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.

2014 முதல் 2019 வரையில் செல்லோ அப்ரம் மாபுன்யா என்பவர் தென்னாப்பிரிக்கா நாட்டில் சுமார் 36 வீடுகளை இரவு நேரங்களில் உடைத்து கொள்ளை அடித்துள்ளான்.

அதோடு 35 பெண்களை அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் பாலியல் வன்புணர்வும் செய்துள்ளார். அவரை கைது செய்த பொலிஸார் விசாரணையின் பின் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். 

வழக்கினை விசாரித்த அந்நாட்டின் பிரிட்டோரியா உயர்நீதிமன்ற நீதிபதி அவரை குற்றவாளியாக கண்டு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமல்லாது 5 ஆயுள் தண்டனையும் வழங்கினார்.