SuperTopAds

கணவரின் கைபேசியை நோண்டிய மனைவிக்கு 1 இலட்சம் அபராதம்!!

ஆசிரியர் - Editor II
கணவரின் கைபேசியை நோண்டிய மனைவிக்கு 1 இலட்சம் அபராதம்!!

கணவரின் கைபேசியை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்னென்ன விடயங்கள் உள்ளது என்று நோண்டி பார்த்த மனைவிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாட்டில் தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில் மனைவி ஒருவர் தனது கணவரின் கைபேசியை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்னென்ன விடயங்கள் உள்ளது என்று நோண்டி பார்த்தார். 

அந்த கைபேசியில் பல தகவல்கள் இருந்தன. அவற்றை பார்த்த மனைவி அவற்றை தனது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது சில உறவினருக்கும் அனுப்பி வைத்தார்.

இவ்விடயம் தொடர்பில் கணவர் தனி மனித உரிமை மீறல் சட்டத்தின் அடிப்படையில் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மனைவிக்கு ஒரு இலட்சத்தி 7 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.