பாரம் தாங்காமல் நதியில் கவிழ்ந்த படகு!! -156 பேரை காணவில்லை-
180 பயணிகளுடன் சென்ற படகு பாரம் தாங்காமல் நதியில் மூழ்கியதால் அதில் பயணித்த 156 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலே நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக 180 பயணிகளுடன் சென்ற படகு புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்துச் சம்பவத்தில் 4 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். இருப்பினும் காணாமல் நீரில் மூழ்கி போன 156 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
காணாமல் போன 156 பேரில் பலர் நீருக்கு அடியில் மூழ்கியிருக்கலாம் என்று அந்நாட்டின் தேசிய உள்நாட்டு நீர்வழி அமைப்பின் பகுதி மேலாளர் யூசுப் பிர்மா தகவல் தெரிவித்துள்ளார்.