நேருக்கு நேர் மோதி இரு ரயில்கள்!! -200 பேர் காயம்: 47 பேரின் நலை கவலைக்கிடம்-
மலேசியாவில் இரு மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 200 பயனிகள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் இரட்டை கோபுர சுரங்கபாதையில் காலிப்பெட்டிகளுடன் சென்று கொண்டு இருந்த மெட்ரோ ரயில் அதே வழித்தடத்தில் 213 பயணிகளுடன் வந்த மற்றொரு ரயில் மீது மோதியது.
இவ்விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த 47 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 166 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறித்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.