SuperTopAds

தாய் டயானாவின் மறைவால் போதை பழக்கத்துக்கு அடிமையானேன்!! -மனம் திறந்து பேசிய இங்கிலாந்து இளவரசர் ஹாரி-

ஆசிரியர் - Editor II
தாய் டயானாவின் மறைவால் போதை பழக்கத்துக்கு அடிமையானேன்!! -மனம் திறந்து பேசிய இங்கிலாந்து இளவரசர் ஹாரி-

தனது தாய் டயானாவின் மறைவால் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். 

இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அரச குடும்பத்தில் இருந்து விலகி அமெரிக்காவில் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் அண்மை காலமாக அரச குடும்பத்தின் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் அரச குடும்பம் தொடர்பிலும் அரச குடும்பத்தில் தனது வாழ்வு குறித்தும் அவர் வெளிப்படையாக பேசி வருகிறார். 

தனது தாய் டயானா மறைவுக்கு பின் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தாகவும், ஒரு கட்டத்தில் மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக நேர்ந்ததாகவும் ஹாரி தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.