சீனா நாட்டில் திருமணம் ஆகாமல் வாழும் 3 கோடி ஆண்கள்!!
சீனா நாட்டில் சுமார் 3 கோடி ஆண்கள் திருமாணம் ஆகாமல் வாழ்வதாக அந்நாட்டின் தேசிய புள்ளிவிபரப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்நாட்டின் பெண் குழந்தைகளின் பிறப்பு வீதம் குறைந்தாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
1979 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் “ஒரு குழந்தை“ பிறப்பு திட்டம் சீன அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. இதனால் சில தாய்மார்கள் தமக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக கருகலைப்பு செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதனால் இன்றுவரை அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என சியான் பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.