“மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்” -மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் பதாகையுடன் பங்கேற்ற பெண்-
கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவில் 2021 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது.
இதில் பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், பிரபஞ்ச அழகி போட்டியில் மியான்மர் நாட்டை சேர்ந்த துசர் விண்ட் லவின் பங்கேற்றார்.
இவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் அதற்கு முந்தைய சுற்றுகளில் பங்கேற்றார். அப்போது, அழகி போட்டி நடைபெறும் மேடையில் துசர் விண்ட் லவின் தனது கையில் ஒரு பதாகையுடன் வந்தார். அந்த பதாகையில் ’மியான்மருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என எழுதப்பட்டிருந்தது.