அவுஸ்திரேலிய –சீனா வர்த்தகப் போர்!! -அவுஸ்திரேலியாவுடன் துணை நிற்போம் என்கிறது அமெரிக்கா-
சீனா அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வர்த்தக ரீதியாக போரைத் தொடுத்துள்ள நிலையில், சீனாவை எதிர்த்து அவுஸ்திரேலியாவுடன் அமெரிக்கா இணைந்து நிற்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் இத்தகைய நடத்தை அமெரிக்க – சீன உறவுகளின் முன்னேற்றத்தைத் தடுக்கும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.