தொற்றுள்ளோரிடம் இருந்து 6 அடி தள்ளி இருந்தாலும் வைரஸ் பரவ வாய்ப்பு!! -அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் அதிர்ச்சி தகவல்-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் 6 அடிக்கு அப்பால் இருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்பட்டுக் காற்றில் கலக்கும் வைரஸ் ஏனையோரின் மூச்சுக்காற்றில் ஊடாக உட்புகும் வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் புதிதாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரிடம் இருந்து வெளிப்படும் வைரஸ் காற்றில் கலந்து 6 அடிக்கு அப்பால் உள்ள ஒருவருக்கும் தொற்ற வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
காற்றோட்டம் குறைந்த, கூட்டம் அதிகமுள்ள உள்ளரங்கத்தில் தொற்றுள்ளோரின் சளியில் இருந்து வெளிப்படும் வைரஸ் அங்குள்ள பிறருக்குத் தொற்றும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.