யாழ்.மாவட்டத்தில் 1000 படுக்ககைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை நிலையத்தை ஒழுங்கமைக்க நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 1000 படுக்ககைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை நிலையத்தை ஒழுங்கமைக்க நடவடிக்கை..

யாழ்.மாவட்டத்தில் சுமார் 1000 படுக்கைகளுடன் கூடிய நிலையத்திற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி ச.ஸ்ரீதரன் கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டத்தல் உள்ள சுகாதார நிலமைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இன்றைய தினம் யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்த பணிப்பாளர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து வருவது மற்றும் சிகிச்சை நிலையங்களில் கட்டில்கள் எவ்வாறு அதிகரிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் இன்று அனைவரும் இணைந்து கலந்துரையாடி இருந்தோம். 

அதன்படி யாழ் மாவட்டத்திலேயே கிட்டத்தட்ட 1000கட்டில்களுடன் கூடிய சிகிச்சை நிலையத்திற்கான ஒரு ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளோம். அதேபோல கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டால் 

அவர்களுக்கு எவ்வாறு மருத்துவ சிகிச்சை வழங்குவது அதாவது சத்திர சிகிச்சை மேற்கொள்வது தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்துள்ளோம். அத்தோடு இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருடனும் கலந்துரையாடினோம். 

அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல யாழ். மாவட்டத்தில் பிசிஆர் பரிசோதனையை எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இரு மடங்காக அதிகரிப்பதற்காக ஆலோசித்து இருக்கின்றோம். 

அதுபோல அந்த எடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளும் அந்த நாளோ அல்லது அடுத்த ஒரு நாளில் வெளியிடக்கூடிய ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம்.

இதனைவிட மக்களுக்கான கடப்பாடு ஒன்று உள்ளது முடக்கல் நிலை என்பதனை ராணுவத்தினர் சுகாதார பணியாளர்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல அதாவது ஒரு கிராமத்தினை முடக்குவது என்பது அதிகாரிகள் தீர்மானிப்பது அல்ல. 

மக்கள்தான் தீர்மானிப்பது மக்கள் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றி கொரோனா விருந்து தங்களை பாதுகாப்பதன் மூலம் ஒரு கிராமத்தினை அல்லது ஒரு கிராம சேவையாளர் பிரிவினை முடக்க வேண்டிய தேவை ஏற்படாது. 

எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றி செயற்படுவதன் மூலம் மாவட்டத்தினை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு