நாட்டை முடக்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது..! அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்கிறார் அமைச்சர்..
அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லாமல் நாட்டை முடக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. என கூறியருக்கும் கொவிட் கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே,
நாட்டை முடக்கும் அரசியல்ரீதியான தீர்மானம் முடிவுகள் ஒருபோதும் எடுக்கப்படபோவதில்லை. எனவும் அமைச்சர் கூறியிருக்கின்றார். சமகால நிலமைகள் குறித்து இன்று ஊடகங்ளுக்கு கருத்து கூறும்போதே மேற்கண்டாறு கூறனார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், நாட்டில் கொரோனா தொற்று நிலைமையை பொறுத்து நாட்டை முடக்கும் தீர்மானம் எடுக்கப்படலாம். ஆனால் அரசியல்ரீதியான தீர்மானம் எடுக்கப்படபோவதில்லை.
மேலும் அறிவியல்பூர்வமான ஆதராங்கள் இல்லாமல் நாட்டை முடக்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவும், கிராம மட்டங்களில் தனிமைப்படுத்தலை முன்னெடுக்கும் அதிகாாரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.