கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மிகப்பெரும் வைத்தியசாலையை உருவாக்கியுள்ள இலங்கை இராணுவம்..!
சீதுவ பகுதியில் மிகப்பெரும் கொவிட் 19 சிகிச்சை மருத்துவமனையை இராணுவம் உருவாக்கியுள்ளது.
கொரோனா 3ம் அலை காரணமாக நாட்டில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் தற்போது இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது,
அதனை நிவர்த்தி செய்வதற்காக மிகப்பெரும் வைத்தியசாலையை இலங்கை இராணுவம் உருவாக்கியுள்ளது.
இது குறித்து இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகையில், 2500 படுக்கைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன,
அடுத்த 3 அல்லது 4 நாட்களில் மேலும் 5000 படுக்கைகளை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.
அவசர மருத்துவ வசதி பல தனிமைப்படுத்தப்பட்ட விடுதிகள் ஆனது, எந்த நேரத்திலும் 1,200 நோயாளிகளை வைத்திருக்க கூடியவையாகும்.