செப்டம்பரில் மீண்டும் திறக்கப்படவுள்ள கூகுள் அலுவலகங்கள்!!
இந்த ஆண்டின் இறுதியில் கூகுள் நிறுவனத்தின் அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும், அதில் பணியாற்றும் 20 சதவிகித ஊழியர்கள் தொடர்ந்து வீடுகளில் இருந்தே பணியாற்றுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனங்களில் பணியாற்றும் 60 சதவிகித பணியாளர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் அலுவலகங்களுக்கு வந்தும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். எஞ்சிய 2 நாட்கள் தங்கள் விருப்பம் போல் அவர்கள் பணியாற்றலாம்.
இவர்களை தவிர 20 சதவிகித பணியாளர்கள் தங்களது பணியிடங்களை கூகுளின் வேறு இடங்களுக்கு மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை கூகுள் பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அதன் நிறுவுன தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். எதிர் வரும் செப்டம்பர் வரை கூகுளின் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ஊழியர்களும் தொடர்ந்து வீடுகளில் இருந்தே பணியாற்றுவார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.