நாட்டை முடக்குவது தொடர்பில் பேசினோம்..! எதிர்கால நிலமைகளை பொறுத்து முடிவுகள் மாறுபடலாம் என்கிறது அரசு..

ஆசிரியர் - Editor I
நாட்டை முடக்குவது தொடர்பில் பேசினோம்..! எதிர்கால நிலமைகளை பொறுத்து முடிவுகள் மாறுபடலாம் என்கிறது அரசு..

நாட்டை முழுமையாக முடக்குவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்தது. என கூறியிருக்கும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆனாலும் நாட்டை முடக்கும் அவசியம் இப்போதைக்கு இல்லை. பகுதி பகுதியாக முடக்கலாம் என்றே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

இது குறித்து அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டை முடக்கும் அவசியம் உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்திருக்கின்றது. ஆனாலும் தற்போதுள்ள நிலையில் பகுதி பகுதியாக முடக்குவதே போதுமானது என அரசாங்கம் கருதுகிறது. 

ஆனாலும் நாட்டின் எதிர்கால நிலமையை பொறுத்து நிலைப்பாடு மாறுபடலாம். எனவும் அவர் கூறியிருக்கின்றது. 

Radio