க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகும்..! பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தகவல்..

ஆசிரியர் - Editor I
க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகும்..! பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தகவல்..

2020ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகும். என பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் கூறுகின்றன. 

அதன்படி உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்றிரவுக்கு முன்னர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம். 2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளை கடந்த ஏப்ரல் 30 க்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டது. 

ஆனால் இசட் மதிப்பெண் கணக்கீடு இரட்டை சோதனை செயல்முறை காரணமாக அது ஒரு வாரம் தாமதமானது. பரீட்சை திணைக்கள அதிகாரிகளின் கூற்றுப் படி பெறுபேறுகள் வெளியிடும் 

ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன, அது இன்று வெளியிடப்படும். வெளியிடப்படும் முடிவுகளை கல்வியமைச்சின் www.doenets.lk என்ற வலைத்தளத்தில் பார்வையிடலாம்.

வெளியாகும் முடிவுகளின் அடிப்படையில், 2021 செப்டம்பர் மாதத்துக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Radio