அமெரிக்கா மிக மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்!! -வடகொரியா கடும் எச்சரிக்கை-
அமெரிக்கா படு மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று வடகொரியா வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி குவான் யொங் கன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்கா வடகொரியா மீதான விரோதக் கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான பைடனின் நோக்கம் அவரது அறிக்கை தெளிவாக பிரதிபலிக்கிறது.
அமெரிக்கா தலைமை நிர்வாகி இன்றைய பார்வையின் வெளிச்சத்தில் ஒரு பெரிய தவறு செய்தார் என்பது உறுதிவிட்டதனால் காலப்போக்கில் அமெரிக்கா மிகவும் மோசமான சூழ்நிலையினை எதிர்நோக்க நேரிடும் என்றார்.