SuperTopAds

முககவசம் அணியாத பிரதமர்!! -14 ஆயிரம் அபராதம் விதிப்பு-

ஆசிரியர் - Editor II
முககவசம் அணியாத பிரதமர்!! -14 ஆயிரம் அபராதம் விதிப்பு-

தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் முககவசம் அணியாமல் கலந்து கொண்ட தாய்லாந்து பிரதமருக்கு பாங்காக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையாக 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

முக கவசம் அணியாதவர்களுக்கு 20 ஆயிரம் பாட் (இலங்கை மதிப்பில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொகை) வரை அபராதம் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் பாங்காக்கில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முக கவசம் அணியாமல் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, பாங்காக் நிர்வாகம் அவருக்கு 6 ஆயிரம் பாட் அபராதம் விதித்தது.