பாடசாலைகள் மூடப்படுமா..? கொவிட் செயலணியை எதிர்பார்க்கிறது கல்வியமைச்சு..
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா அபாயம் காரணமாக பாடசாலைகளை மூடும் தீர்மானத்தை தேசிய கொவிட் 19 தடுப்பு செயலணி எடுக்கவில்லை. என கல்வி அமைச்சு கூறியுள்ளது.
பாடசாலைகளை மூடுமாறு குறித்து கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் ஏதாவது அறிவிப்பு விடுத்தால் மாத்திரம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.அத்துடன் தற்போது வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டி படி பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை வழமைபோல் முன்னெடுக்கப்படும்
ஏதாவது பாடசாலையில் கொரோனா தொற்று தொடர்பாக அபாய நிலை ஏற் பட்டால் பாடசாலைகளின் அதிபரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக
அந்தந்த பாடசாலைகளின் செயற்பாடுகள் முன் னெடுத்துச் செல்ல தேவையைான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.